bபின் பாzஸ் மகளிர் கல்லூரிக்கான புதிய மாணவியர் அனுமதி – 2022

அனுமதி பரீட்சைகள் எதிர்வரும் சனி, ஞாயிறு (01, 02/10/2022) தினங்களில் கல்லூரி வளாகத்தில் நடைபெறும்
மேலதிக விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது:
அல் இமாம் அப்துல் அஸீஸ் bபின் பாzஸ் மகளிர் கல்லூரி மல்வானையில் அமைந்துள்ளது. இது 1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கல்லூரி, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவலக திணைக்களத்தின் முதன்மை கல்லூரிகளில் ஒன்றாகவும், தனியார் பாடசாலையாகவும் பதியப்பட்டுள்ளது. இங்கு மாணவிகள் க .பொ.த சாதாரண தர பரீட்சைகளின் பின் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். இங்கே கல்வி கற்ற பல மாணவிகள் உள்நாட்டு பல்கலைக்கழகங்களிலும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் மேற்படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் இக்கல்லூரி, மலேசியா சூடான் சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலுள்ள சில பல்கலைக்கழகங்களின் நெருங்கிய தொடர்பை பேணி வருவது இங்கு கல்வியை தொடரும் மாணவிகளின் தன்னம்பிக்கைக்கு உரமூட்டுவதாக உள்ளது. இங்கு கல்வியை தொடரும் மாணவிகள் உள்நாட்டு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியற் கல்லூரிகளில் உயர் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தயார்படுத்தப்படுகின்றனர்.
🧭 இலக்கு:
பல்துறைகளில் தேர்ச்சிபெற்ற இஸ்லாமிய பெண் ஆளுமைகளை உருவாக்கல்
📚 கற்கை நெறிகள்:
இக்கல்லூரியில் வழங்கப்படும் பிரதான கற்கை நெறிகள் பின்வருமாறு:
1) மௌலவி அல் ஆலிம் கற்கை நெறி
2) அரபு மொழி கற்கை நெறி
3) க.பொ.த. (உயர் தரம்) கலைப்பிரிவு கற்கை நெறி
📒 துணை கற்கை நெறிகள்:
கல்லூரியில் வழங்கப்படும் துணை கற்கை நெறிகளும், தொழில்சார் கற்கை நெறிகளும் பின்வருமாறு:
1) தலைமைத்துவப் பயிற்சி
2) தையல் பயிற்சி நெறி
3) கணனி பாட நெறி
4) கைப்பணி
5) உளவியல் கற்கை நெறிகள்
6) முன்பள்ளி ஆசிரியர் பயிற்சிகள்
📋 அரசாங்க பரீட்சைகள்
கல்லூரியில் கற்கும் மாணவிகள் பின்வரும் அரச பரீட்சைகளில் கலந்து கொள்கின்றனர்
1) அஹதியா பரீட்சை
2) தர்மாச்சாரிய பரீட்சை
3) அல் ஆலிம் பரீட்சை
4) GCE A/L பரீட்சை
இக்கல்லூரி மாணவிகளின் இணைப் பாடவிதான செயற்பாடுகளை பின்வரும் இணைப்புக்களினூடாகப் பார்வையிடலாம்:
YouTube: https://bit.ly/3dB6aXk
Facebook: https://bit.ly/3qWok8S
📝 விண்ணப்பத் தகைமை
1) தேகாரோக்கியமிக்க நல்லொழுக்கமுள்ள இஸ்லாமியப் பெண்ணாக இருத்தல்.
2) 2005 ம் ஆண்டு பிறந்திருத்தல்.
3) 2021 (2022) ல் க.பொ.த(.சா.தரப்) பரீட்சையில் தோற்றியிறுத்தல்.
🟥விண்ணப்பிக்கும் முறை:
பின்வரும் இணைப்பினூடாக விண்ணப்பிக்கவும்:
👇👇👇👇👇👇👇👇👇
https://bit.ly/3DTvORA
⏰ நேர்முகப் பரீட்சை திகதி:
எமது கல்லூரியின் புதிய மாணவியர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சையும் எழுத்து பரீட்சையும் எதிர்வரும் 01,02/10/2022 சனி மற்றும் ஞாயிறு தினங்களில், கல்லூரி வளாகத்தில், காலை 8 மணி முதல் நடைபெறும்.
📁 நேர்முகப் பரீட்சைக்கு கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:
1) தேசிய அடையாள அட்டை.
2) கடந்த வருடங்களில் மாணவிக்கு பாடசாலையினால் வழங்கப்பட்ட பெறுப்பேற்று அறிக்கைகள் (மூலப்பிரதி)
3) மாணவியின் திறமைகளை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்களும் ஆவணங்களும்.
4) எழுத்து பரீட்சையை Google form மூலமாக செய்ய விரும்பும் மாணவிகள் (மாத்திரம்) அதற்கு தேவையான சாதனத்தைக் கொண்டு வர வேண்டும்.
உலகக்கல்வி மட்டுமின்றி மார்க்க அறிவும் ஆழுமையும் கொண்ட பெண் சமுதாயம் ஒன்றினை உறுவாக்கிட களம் அமைத்து, செதுக்கப்பட்ட முத்துக்களாய் மாணவிகளை சமுதாயத்திற்கு வெளியாக்கிவருகின்ற பின்பாஸ் உங்களையும் அன்போடு வரவேற்கின்றது.